BREAKING NEWS

நீங்க‌ள் ஏன் அர‌சுக்கு ஓவ‌ராக‌ ஆத‌ர‌வு தெரிவிக்கிறீர்க‌ள்

நீங்க‌ள் ஏன் அர‌சுக்கு ஓவ‌ராக‌ ஆத‌ர‌வு தெரிவிக்கிறீர்க‌ள் என‌ ஒருவ‌ர் கேட்டார். எந்த‌ அர‌சாக‌ இருந்தாலும் அந்த‌ அர‌சு ந‌ம் ச‌மூக‌த்துக்கென‌ குறிப்பாக‌ அநியாய‌ம் செய்யாத‌ போது அர‌சை எதிர்க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ந‌ம‌க்கு இல்லை. அரிசி, ப‌ருப்பு, தேங்காய் த‌ட்டுப்பாடு நாட்டின் அனைத்து ம‌க்க‌ளுக்கும் ப‌ச்திப்புத்தான். அத‌னால் அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌டுவ‌து ஒரு கோடி 70 லட்ச‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ள்தான். அத‌னால் அதை அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். இந்த‌ அர‌சாங்க‌த்தை கொண்டு வ‌ந்த‌து 95 வீத‌ம் சிங்க‌ள ம‌க்க‌ளாகும். ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் வ‌ட‌க்கு கிழ‌க்கில் த‌மிழ் பேசும் எந்த‌ தொகுதியையும் அநுர‌குமார‌ வெல்ல‌வில்லை. கோட்டாப‌ய‌ பெரும்பாலான‌ சிங்க‌ள‌ வாக்குக‌ளால் வென்ற போதும் இதைத்தான் சொன்னோம், சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு பிடிக்காவிட்டால் அவ‌ர்க‌ள் ஆட்சியை மாற்றுவார்க‌ள் என்று. ந‌ம் ச‌மூக‌த்துக்கென‌ குறிப்பாக‌ இன‌வாத‌ செய‌ல் இந்த‌ அர‌சில் இல்லை. அநுர‌குமார‌ ஜ‌னாதிப‌தியாக‌ 4 மாத‌ம் க‌ட‌ந்த‌ நிலையில் ச‌மூக‌ம் நிம்ம‌தியாக‌ உள்ள‌து. முஸ்லிம் அமைச்ச‌ர் இல்லையே என்பார்க‌ள் சில‌ர். ர‌வூப் ஹ‌க்கீம், ரிசாத், ஹ‌லீம், அதாவுல்லா போன்றோர் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருக்கும் போதுதான் இந்த‌ ச‌மூக‌ம் அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து. முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு விரோத‌மான‌ அனைத்து விட‌ய‌ங்க‌ளுக்கும் ப‌ண‌ம் ப‌த‌விக்காக‌ கை உய‌ர்த்தினார்க‌ள் முஸ்லிம் அமைச்ச‌ர் இல்லாத‌ நிலையிலும் முஸ்லிம் ச‌மூக‌ம் நிம்ம‌தியாக‌ வாழ்கிற‌து. சிவ‌ப்ப‌ரிசி, தேங்காய் ச‌ம்ப‌ல் காலையில் சாப்பிடுவ‌து சிங்க‌ள‌ ம‌க்க‌ள்தான். இந்த‌க்கால‌த்து முஸ்லிம்க‌ள் இவ‌ற்றை சாப்பிடுவ‌து குறைவு. இடிய‌ப்ப‌ம், சோட் ஈட்ஸ் பீசா, கீசா என்ப‌துதான் எம‌து ம‌க்க‌ள் காலை சாப்பாடு. ஆக‌வே இத‌ற்காக‌வெல்லாம் நாங்க‌ள் குதிக்க‌ தேவையில்லை. ஆனால் முஸ்லிம் ச‌மூக‌த்தை ம‌ட்டும் குறி வைத்து செய‌ற்ப‌ட்டால் உல‌மா க‌ட்சியும் ஐக்கிய‌ காங்கிர‌சும் போர்க்கொடி தூக்கும். முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி. 26.1.2025

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar