BREAKING NEWS

புத்தளம் நகரம், முள்ளிபுரம், ரத்மல்யாய ஆகிய பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)யின் புத்தளம் நகர செயற்குழுவினர் புத்தளம் நகரம், முள்ளிபுரம், ரத்மல்யாய ஆகிய பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். NPP புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைஸல் (MP) அவர்களின் ஒத்துழைப்புடன் இவ்வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் ஒரு நிகழ்வாக, இன்று (2025.01.27) திங்கள்கிழமை, புத்தளம் நகர சபை செயலாளர் எல்.ஜீ.பி. பிரீத்திக்கா, தொழிநுட்ப உத்தியோகத்தர் கே. கஸானி ஆகியோருடன் ரின்ஷாத் அஹ்மத், சர்ராஜ் லாபிர் (வட்டாரம் 01), ஆசிரியர் சிபாக் (வட்டாளர் 02), நப்லான் நபீஸ், மொஹமட் பஸ்ரின் (வட்டாளர் 05) ஆகியோர் கொண்ட தே.ம.ச. புத்தளம் நகர குழுவினர் நீண்ட காலமாக புனருத்தாபனம் செய்வதற்கான தேவைகள் காணப்படும் பின்வரும் இடங்களுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர். ජාතික ජන බලවේග (NPP)යේ පුත්තලම නාගරික කමිටුව විසින් පුත්තලම නගරය, මුල්ලිපුරම, රත්මල්යාය ආදී ප්‍රදේශවල විවිධ සංවර්ධන හා යටිතල පහසුකම් ප්‍රවර්ධන වැඩකටයුතු සිදුකරති. NPP පුත්තලම දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී මොහමඩ් ෆයිසල් (MP) මහතාගේ සහයෝගයෙන් මෙම වැඩකටයුතු සාර්ථකව සිදුවෙමින් පවතී. ඒවායින් එක කටයුත්තක් ලෙස, අද (2025.01.27) වැනි සඳුදා, පුත්තලම නගර සභාවේ ලේකම් එල්.ජී.බී. ප්‍රීතිකා මහත්මිය, තාක්ෂණ නිලධාරි කේ. කසානි මහතා සමග ජා.ජ.බ. පුත්තලම කමිටුවේ රින්ෂාඩ් අහ්මද්, සර්රාජ් ලාෆිර් (කොට්ඨාශය 01), සිෆාක් ගුරුවරයා (කොට්ඨාශය 02), නෆ්ලාන් නෆීස් හා මොහමඩ් ෆස්රින් (කොට්ඨාශය 05) ආදීහු දීර්ඝ කාලයක් ප්‍රතිසංස්කරණය සිදුවිය යුතු අවශ්‍යතා පැවැති පහත දැක්වෙන ස්ථානවල ක්ෂේත්‍ර නිරීක්ෂණ චාරිකාවක යෙදුනාහ. කේ.කේ. වීදිය හා සීමාවෙලිය (කොට්ඨාශය 01), කඩයාකුලම පාර හා සෙම්මන්දළුව (කොට්ඨාශය 02) සහ වාන හංදිය (කොට්ඨාශය 04) නෙඩුන්කුලම වැව් බැම්මේ පදික මාවතේ තණ පිටිය සකස් කිරීමත් අලංකරණයත් යන ස්ථානවල පැවැති සංවර්ධන හා යටිතල පහසුකම් ප්‍රවර්ධන අවශ්‍යතා නිරීක්ෂණය කෙරුණි. ▪ கே.கே. வீதி (வட்டாரம் 01) ILA Complex கடைதொகுதி முதல் மரிக்கார் வீதி சந்திப்பு வரை பழுதடைந்துள்ள இடங்களை திருத்தம் செய்து செப்பனிடலும், ▪ சீமாவௌி உள்ளக வீதிகளை செப்பனிடல், மழை நீர் வழிந்தோடுவதற்கு கால்வாய் அமைத்தல். ▪ கடையாக்குளம் வீதி (வட்டாரம் 02) முழுமையாக புனருத்தாபனம் செய்யப்படவுள்ள கடையாக்குளம் வீதியின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக குன்று குழிகளை வெட்டி சீர்படுத்துதல், மதகு (போக்கு)களை அமைத்தலும், ▪ செம்மந்தளுவை உள்ளக வீதிகளில் குன்று குழிகளை வெட்டி சீர்படுத்துதல், மழை நீர் வழிந்தோடுவதற்கு கால்வாய் அமைத்தல், மதகு (போக்கு)களை அமைத்தல். ▪ வான் சந்தி (வட்டாரம் 04) நெடுங்குளம் குளத்துக் கட்டு நடைபாதை புல் வௌியில் கதிரைகள் அமைத்தலும் அலங்கரிப்பும். இப்புனருத்தாபன பணிகள் தொடர்பாக NPP புத்தளம் நகர செயற்குழுவினர் அந்தந்த கிராமங்களில் நடத்திய மக்கள் சந்திப்புக்களின்போது கூறப்பட்ட பல்வேறு தேவைகளில் இருந்து, புத்தளம் நகர சபை ஊடாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இக்கள விஜயம் அமையப்பெற்றது. Media Unit NPP Puttalam 27.01.2025

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar