முஸ்லிம் காங்கிரசையும் அ.இ.மக்கள் காங்கிரசையும் முஸ்லிம்கள் ஒழிப்பதன் மூலமே உரிமைகளை வெல்ல முடியும்.
Posted by aljazeeralanka.com on February 24, 2025 in | Comments : 0
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்குள் இருந்து போராடியோர் வெளியேறுவது அல்லது தலைமையிடம் சரணடைவது தான் முடிவு.
நிசாம் காரியப்பர், உதுமான் லெப்பை, ஹரீஸ், பசீர், ஹிஸ்புல்லா, ஹசனலி, சிராஸ், ஜமீல், சேகு, ஜவாத், வை எல் எஸ் என பலர் கட்சிக்குள் இருந்து போராடினர். முடியவில்லை. பலர் வெளியேறி விட்டனர்.
கடைசியில் சிலர் ஹக்கீமிடம் சரணடைந்து பொம்மை ஆகினர்.
ஹக்கீம் 2000ம் ஆண்டு தலைவராகி ஒரு வருடத்திலேயே நான் புரிந்து கொண்டேன் ஹக்கீம் முஸ்லிம் சமூக துரோகி என்று. 2001 முதல் அவருடைய அரசியல் பிழையானது, சுயநலன்மிக்கது, சமூகத்தை ஏமாற்றுவது என எதிர்க்கிறேன். எனக்கு பின்தான் மற்றவர்கள் ஒவ்வொன்றாக அக்கட்சியிலிருந்து விலகினர், அல்லது விலக்கப்பட்டனர்.
கடைசியாக என் சொந்தக்காரர் யஹ்யாகான் இப்போது வெளியேறியுள்ளார். இவரும் நானும் ரிசாத் பதியுதீனின்கட்சியில் இருந்து ஏமாற்றப்பட்டவர்கள்.
அவருக்கு பல தடவை சொல்லியுள்ளேன், ரிசாத் பதியுதீனையோ ஹக்கீமையோ நம்ப வேண்டாம் என்று ரிசாத் போல் ஹக்கீமு உங்களை பாவிக்கிறார் என்று. இப்போது புரிந்துள்ளார்.
மு. கா உயர்பீடத்தில் இப்போது கல்முனை தொகுதியிலிருந்து உருப்படியான எந்த ஆளுமையும் இல்லை. கல்முனை மாநகர சபை உறுப்பினர்களாக இருந்து மக்கள் நிதியை கொள்ளையடித்த சிலர் மட்டும் ஹக்கீமுடன் ஒட்டியுள்ளனர். இவர்களில் ஒருவர் பெயரை கூட தேசிய மட்டத்தில் மக்களுக்கு தெரியாது.
ஆகவே, கிழக்கு முஸ்லிம்கள் ஒன்று பட்டு முஸ்லிம் காங்கிரசையும் அ.இ.மக்கள் காங்கிரசையும் ஒழிப்பதன் மூலம் மட்டுமே முஸ்லிம்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் ஹக்கீம், ரிசாத் கள்ள கோஷ்டிக்கு பாடம் புகட்டி கிழக்கு மக்களுக்கான, தன்மானமிக்க அரசியலை முன்னெடுத்து உரிமைகளை பெற முடியும்.
முபாறக் முப்தி
உலமா கட்சி,
ஐக்கிய காங்கிரஸ்
24.2.2025
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment