இதற்கு பதில் கூறுவீர்களா Hakeem டலைவா
Posted by aljazeeralanka.com on February 26, 2025 in | Comments : 0
கிழக்கிலே சட்டவிரோதமான முறையில் முஸ்லிம் "ஜிஹாத்" என்ற இயக்கம் இயங்கி வந்ததாகவும், அவர்கள் கிழக்கிலே ஷரீயா சட்டத்தை அமுல்படுத்த வளைகுடா நாடுகளிடமிருந்து ரகசியமான முறையில் பணம் பெற்றுவந்தார்கள் என்றும், அவர்களுக்கு "கருணா"குழுவினர் ஆயுதபயிற்சி வழங்கினார்கள் என்றும், அந்த ஜிஹாத் குழுவினர் 2006ஆம் ஆண்டு "வாகரை" என்ற பகுதியில் கருணா குழுவுக்கும் வடக்கிலே இருந்துவந்த புலிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் பங்குபற்றினார்கள் என்றும், அவர்களுடைய செயல்பாடுகளை நாங்கள் கவணியாதுவிட்டது பிழையாய் போய்விட்டதென்றும் புனையப்பட்ட பொய் கதைகளை....மு.காவின் தலைவரான ஹக்கீமாகிய நீங்களும், பேராசிரியர் ராஜன் கூல் அவர்களும் ஆளுக்கொரு புத்தகம் வெளியிட்டு அதிலே மேற்சொன்ன நச்சுக் கருத்துக்கள் அடங்கிய புனைகதைகளை குறிப்பிட்டிருந்தீர்கள்....
இதிலிருந்து நாங்கள் உங்களிடம் கேட்கும் கேள்வி இதுதான் தலைவா.....!!!
அண்மையில் இலங்கை அரசாங்கம் சில பயங்கரவாத இயக்கங்களை இனம்கண்டு அத்தனை இயக்கங்களையும் தடைசெய்திருந்தது அல்லவா...?
அந்த தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் நீங்கள் குறிப்பிட்ட கிழக்கிலே சட்ட விரோதமாக இயங்குகின்ற முஸ்லிம் "ஜிஹாத்" இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்துகொள்ளப்படவில்லையே தலைவா..??? அது ஏன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று உம்மால் பதில் சொல்ல முடியுமா...???
நீங்களும், பேராசிரியர் ராஜன்கூல் அவர்களும் இந்த அபாண்டமான பொய் கதையை சென்றமாதமே உங்களது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதனால்தான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கின்றோம்....குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களை குறிவைத்து இப்படியான அபாண்டங்களை சுமத்தியது மட்டுமல்ல, கிழக்கு முஸ்லிம்கள் என்ற சொல்லையும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள் என்பதனாலும் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறோம்....அதற்கு பதில் கூறுவீர்களா தலைவா....???
Mohamed Ibrahim
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment