BREAKING NEWS

ஜீவன் தொண்டமான் கைது ?,?

குடிநீர் சுத்திகரிப்புக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனக் கலப்பு ரணில் அரசாங்கத்தின் மிகப் பெரும் துரோகம் கொழும்பு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை சுத்திகரிப்பதற்காக எரிக்கப்பட்ட சுண்ணாம்பு (Hydrated Lime) 1500 தொன் கொள்வனவு செய்வதற்காக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை (ஒப்பந்த இலக்கம்: SUP&MM/CHEM/HL – 05/2022/18)” கீழ் தேசிய பத்திரிகைகள் வாயிலாக கேள்விகோரல் அறிவித்தலை வௌியிட்டிருந்தது. குறித்த டெண்டருடன் வழங்கப்பட்ட மாதிரி பரிசோதிக்கப்பட்டதன் பின்னர், குறைந்த விலைமனு முன்வைத்திருந்ததுடன் அனைத்து தகைமைகளையும் கொண்டிருப்பதாக தெரிவித்து குறித்த ஒப்பந்தம் Ceegreen Engineering (Pvt) Ltd நிறுவனத்துக்கு கடந்த 2024.07.31 ம் திகதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் , நீர் வழங்கல் அமைச்சராக ஜீவன் தொண்டமான் கடமையாற்றிய காலப்பகுதியில் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் குறித்த நிறுவனம் சுண்ணாம்பு இறக்குமதி செய்த பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அதில் உள்ளடங்கியுள்ள குரோமியத்தின் அளவு 11-14 mg/kg அளவில் காணப்பட்டுள்ளது. பொதுவாக குரோமியத்தின் அளவு 10 mg/kg ஐ விடவும் அதிகரிக்கும் பட்சத்தில் அது புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் விடயமாகும். அதன் காரணமாக தற்போதைக்கு குறித்த சுண்ணாம்பை நீர் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்துவதில்லை என்று நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக உரிய தரம் கொண்ட சுண்ணாம்பை வழங்குவது குறித்த நிறுவனத்தின் பொறுப்பு என்றும் அவ்வாறில்லையேல் அவர்களுக்கான கட்டணம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் உணவு, குடிபானம் உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் செய்த அமைச்சர்கள், அதிகாரிகளின் செயற்பாடுகளை உரிய முறையில் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகவே இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க மக்களால் ஓய்வு அளிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதே ​நேரம் மருந்தில் கலப்படம் செய்து மக்களின் உயிருடன் விளையாடிய கெஹலிய ரம்புக்வெல்ல போன்றே குடிநீர் சுத்திகரிப்பு செய்வதற்கு தரமற்ற மூலப் பொருள் இறக்குமதி செய்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய ஜீவன் தொண்டமான், அவரது அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. அவரும் இதில் நேரடித் தொடர்பு இல்லாத போதும், அவருடைய அமைச்சரவை சகாவின் செயற்பாடு என்ற வகையில் கண்டனத்துக்கு உரியவர்தான். உண்மை இவ்வாறிருக்க நேற்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் குறித்த செயற்பாட்டுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைத் தொடர்புபடுத்தி, பொதுமக்களை திசைதிருப்ப முயன்ற டீ.வி. சானக்கவையும் வன்மையாக கண்டிப்பதுடன், நாடாளுமன்றத்தை பிழையாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் தண்டிக்கவும் வேண்டும். அப்போதுதான் ஊழல்வாதிகள் அச்சப்பட்டு அடங்கித் திருந்துவார்கள்.. அதற்குத்தான் பொதுமக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar