BREAKING NEWS

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் புதிய கூட்டணி சாத்தியப்படுமா ?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் புதிய கூட்டணி சாத்தியப்படுமா ?...ஓர் ஆய்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் புதிய கூட்டணி சாத்தியப்படுமா ?...ஓர் ஆய்வு கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது நினைவு தினக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.  இக்கூட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க ஆலோசனை முன் வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு, சகல கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது பற்றி உறைகளை நிகழ்த்தியிருந்தனர். இக்கூட்டத்தில் சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் கூட்டம் இறுதிவரை நடந்து முடிந்தது. அரசியலில் படுதோல்வி அடைந்து,  முகவரியற்றிருக்கும் சிலர் இதற்காக ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், புதிய கூட்டணியை உருவாக்கி, புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பதவி வழங்குவது பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே ஒரு அதிருப்தி காணப்பட்டது. இங்கு பேசப்பட்ட முக்கிய விடயம், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் சகல கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதாகும். இந்த வகையில் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் ஸாகல காரிய வசம் அவர்கள் கலந்து கொண்ட போதிலும், அந்தத் தரப்பில் இருந்து இதற்காக இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை. 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்க நாமல் ராஜபக்ச கனவு காணும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவது சாத்தியமாகுமா ? அடுத்த விடயம் சஜித் பிரேமதாஸா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாட்டில் பலம் பொருந்திய ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அதிலும் விஷேடமாக 2029 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ரணில் விக்கிரம சிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவது சாத்தியப்படுமா ? ஏற்கனவே 100 ஆசனங்களை வைத்திருக்கும் ஒரு கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய சிறு கட்சிகள் ஒன்று படுவது என்பது ஒரு சாத்தியமான விடயம். எந்தவிதமான செல்வாக்கும் இல்லாமல், பாராளுமன்ற உறுப்பினரை கூட பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலையில்,  பல தசாப்தங்களாக தோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கீழ் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் ஏனைய கட்சிகள் ஒன்று படுமா என்பது ஒரு நிறைவேறாத காரியமாகும். தொகுப்பு : முப்தி வெளியீடு: ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar