5 கோடி நஷ்டஈடு கோரி இப்றாஹீம் அன்சாருக்கு அர்கம் நூராமித் Letter
Posted by aljazeeralanka.com on June 25, 2026 in | Comments : 0
5 கோடி நஷ்டஈடு கோரி இப்றாஹீம்
அன்சாருக்கு அர்கம் நூராமித்
Letter of Demand அனுப்பல்
📍📍📍📍📍📍📍📍📍📍
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், ஐந்து கோடி ரூபா நஷ்டஈடு கோரி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற இராஜதந்திரியுமான இப்றாகீம் அன்சாருக்கு #LetterofDemand அனுப்பியுள்ளார்.
ஜுன் 17ஆம் திகதியிடப்பட்ட இந்தக் கடிதம் சட்டத்தரணி ஹசித உடுகமாகொரல்லியினால் இப்றாஹீம் அன்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜன் 10ஆம் திகதி ShortNews இன் அப்துல் ரஹ்மானிற்கு இப்றாஹீம் அன்சார் வழங்கிய நேர்காணலில் போது இஸ்லாமிய நூல்களை மீளாய்வு செய்யும் குழுவிற்கு எதிராக பொய்யான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான அறிக்கைளை வெளியிட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 2,600 ரூபா கொடுப்பனவுகள் பெற்றதாக குறித்த நேர்காணலில் தெரிவித்துள்ளீர்கள். எனினும், தனது சேவைநாடியான அர்கம் நூராமித் எந்தவொரு கொடுப்பனவினையும் பெறவில்லை என தனக்கு அறிவுறுத்தியுள்ளதாக இப்றாஹீம் அன்சாருக்கு அனுப்பிய கடிதத்தில் சட்டத்தரணி ஹசித உடுகமாகொரல்ல குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜிஹாத்துடன் தொடர்பான விடயங்களை tippex பண்ணி அழிப்போம் என மீளாய்வுக் குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்ததாக இப்றாஹீம் அன்சார் குறித்த நேர்காணலில் தெரிவித்தது போன்று எவரும் குறிப்பிடவில்லை எனவும் குறித்த Letter of Demand இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காரணங்களினால் தனது சேவைநாடியின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக ஏழு நாட்களுக்குள் சமூக ஊடகங்களின் ஊடாக பொது மன்னிப்பு கோர வேண்டும். அல்லாத பட்சத்தில் 14 நாட்களுக்குள் ஐந்து கோடி ரூபா பணம் வழங்க வேண்டும் எனவும் Letter of Demand இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment