இவர்களை வைத்துக்கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாது - முஜிபுர் ரஹ்மான் Mp
Posted by aljazeeralanka.com on June 27, 2026 in | Comments : 0
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சாட்சியங்களையும், தகவல்களையும் மூடி மறைத்தவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் ஆலோசகர்களாக இருக்கின்றனர். அதனால் இவர்களை வைத்துக்கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாது என முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்தார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது லசந்த, தாஜுதீன், பிரகீத் எக்னலிகொட உள்ளிட்டோரின் கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் கூறியிருந்தார்.
தாஜுதினின் கொலையில் சாட்சிகளை மூடி மறைத்தவர்கள், தகவல்களை மூடி மறைத்தவர்கள் அன்று ராஜபக்ஷ ஆட்சியுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டவர்கள் உங்களுடைய அரசாங்கத்தில் ஆலோசர்களாக இருக்கின்றனர். அவர்களிடமே ஜனாதிபதி இதனை கேட்க வேண்டும். அவர்கள் அன்று ராஜபக்ஷ்வினருடன் இருந்தனர். ஜனாதிபதிக்கு இந்த விடயத்தில் எதிர்பார்ப்புகள் இருந்தாலும் உங்களின் அரசாங்கத்தில் ஒவ்வொரு இடங்களில் ஆலோசகர்களாக இருக்கின்றனர். இந்த கொலைகள் மூடி மறைக்கப்பட்டுவிடக்கூடாது.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) உரையாற்றுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment