ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நவுஃபர் மௌலவி தண்டனை பெறலாம்
Posted by aljazeeralanka.com on August 12, 2026 in | Comments : 0
நேற்று இரவோடு நிறைவடைந்தது ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை..! நவுஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு விரைவில் தீர்ப்பு.. 245 நாட்கள் நடந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது..!
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நவுஃபர் மௌலவி உள்ளிட்ட 24 எதிரிகளுக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு வரும் பிரதான வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
நேற்று இரவோடு முறைப்பாட்டாளர் தரப்பின் இறுதி சாட்சியங்களை முன்வைப்பது நிறைவடைந்ததுடன், சுமார் 5 ஆண்டு காலத்தில் 245 நாட்கள் விரிவாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பு வழக்கு விசாரணை நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான சுஜீவ நிஸ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#EasterAttackCase #NaufarMaulavi #ColomboHighCourt #EasterSundayAttacks
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment