BREAKING NEWS

ஜம்ய்யத்துல் உலமாவில் சண்டை. கண்ணாடிகள் நொருங்கின.


நேற்று கொழும்பில் நடைபெற்ற ஜம்இய்யத்துல் உலமாவின் கூட்டத்தில் வாய் தர்க்கமும், அதனை தொடர்ந்து கண்ணாடி உடைவுகளும் ஏற்பட்டதாக அறியக்கிடைக்கிறது. இது பற்றி தெரிய வருவதாவது,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அடுத்த மாதம் சமாதான மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தாமரை தடாகத்தில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டுக்கு 70 லட்சம் செலவு செய்யப்படவுள்ளது பற்றியும் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி சபையோருக்கு விளக்கமளிக்கையில் மௌலவி யூசுப் நஜ்முதீன் அவர்கள் எழுந்து அண்மையில் ராணுவ தலைவர் தெஹிவலை பள்ளியில் வைத்து நாட்டில் சமாதானம் பற்றி அழகாக பேசி விட்டு பின்னர் கரிமலையுற்று பள்ளியை உடைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இவ்வளவு செலவில் இப்படி மாநாடு தேவையா என்று கேட்டுள்ளார். இதற்கு தலைவர் ரிஸ்வி முப்தி மௌலவி யுசுப் நஜ்முதீனை கடுமையாக பேசி வாய்மூடியிருக்கும் படி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட சச்சரவு காரணமாக மௌலவி யூசுப் அவர்கள் கண்ணாடி கிளாஸ் ஒன்றை தாக்கிய போது அது உடைந்து சிதற்pயுள்ளது. பின்னர் பலரும் சேர்ந்து யுசுப் நஜ்முதீனை அமைதிப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. இது பற்றி நாம் மௌலவி யூசுப் நஜ்முதீனிடம் கேட்ட போது சம்பவங்கள் உண்மை என்றும் அதனை தாராளமாக நாம் வெளியிடலாம் என்றும் கூறினார்.

Share this:

2 comments :

  1. Porumayilanthu thalaimaiththuvaththitku kattuppadaamal kannadiyai udaiththaal avar aetho aniyaayaththukku ethiraaka kural eluppiyavar aahiduvaaraa?
    Ethu evvaaru irunthaalum intha 70 ilatsam Rs. selavu ennaalum jeeranikka mudyavillai. Ithu pattri sampanthappattavarkal vilakki koorinaal nallthu.
    استغفر الله العظيم
    جزاكم الله خيرا
    انا عبد الحليم

    ReplyDelete
  2. இந்த மாநாட்டினால் வரக் கூடிய கொமிசனில் மண் அள்ளிப் போட்டால் தலைவருக்கு கோபம் வரும் தானே. 70 லட்சம் செலவு செய்து சமுகத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்வதை விட்டு விட்டு அரசுக்கு தூக்கி கொடுக்க நினைக்கும் தலைமை.கச்சு கட்டவை விற்று காசு பார்க்கும் பௌசி .அதற்கு துணை போகும் ஜம்மியா.அதை வைத்து bbs இடம் காலில் விழுந்த ஹஜ் முகவர்கள் ரெம்ப கேவலமான சமுதாய தலைமைகளிடம் சிக்கி தவிக்கும் பாவப்பட்ட இலங்கை முஸ்லிம்கள்.நாம் எதை நோக்கி எங்கே போகிறோம்.சிந்திப்போம்

    ReplyDelete

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar