BREAKING NEWS

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் அனர்த்த நிவாரணம்

வெள்ள‌ அன‌ர்த்த‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அங்க‌த்த‌வ‌ர்க‌ளுக்கு க‌ட்சியின் கொழும்பு மாவ‌ட்ட‌ கிளையில் நிவாரணம் வழங்கி வைக்க‌ப்ப‌ட்ட‌து. ගංවතුර ව්‍යසනයෙන් විපතට පත් කොළඹ දිස්ත්‍රික්කයේ ශ්‍රී ලංකා එක්සත් කොංග්‍රස් පක්ෂ (SLUC) සාමාජිකයින්ට සහන සැලසීම එම පක්ෂයේ කොළඹ දිස්ත්‍රික් ශාඛාවේදී සිදු විය.

இன‌வாத‌ அர‌சு கால‌த்தில் செய‌ல்ப‌ட்ட‌து போல் தொல்லிய‌ல் திணைக்க‌ள‌ம்

கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் இன‌வாத‌ அர‌சு கால‌த்தில் செய‌ல்ப‌ட்ட‌து போல் தொல்லிய‌ல் திணைக்க‌ள‌ம் செய‌ற்ப‌டுவ‌தை த‌விர்க்க‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி ஸ்ரீ. ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து, அண்மைக்கால‌மாக‌ தொல்பொருள் திணைக்க‌ள‌ம் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் சில‌ அடாவ‌டி ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொண்டு வ‌ருவ‌தையும் இத‌னால் பொது ம‌க்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளுக்குமிடையில் முர‌ண்பாடு தோன்றுவ‌தும் க‌வ‌லைக்குரிய‌ விட‌ய‌மாகும். மட்டக்க‌ள‌ப்பு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்திலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களிலும், இது போல் ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் தொல்பொருள் அடையாள‌ங்க‌ள் உள்ள‌தாக‌ கூறி பிர‌ச்சினைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இது இந்திய‌ ம‌த‌ வாதிக‌ள் ம‌சூதிக‌ளில் இந்து ம‌த‌ தொல்பொருள் உள்ள‌து என‌ கூறி ம‌சூதிக‌ளை இடிக்க‌ முனைவ‌து போன்றே உள்ள‌து. தொல்பொருள் என்ப‌து ஆதி கால‌ அடையாள‌ங்க‌ள் என்ப‌த‌ற்க‌ப்பால் ந‌வீன‌ கால‌த்தில் புதைக்க‌ப்ப‌ட்டு மீண்டும் தோண்ட‌ப்ப‌டுப‌வை என்ப‌தை நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ரும் அறிவ‌ர். ஒரு தொல்பொருள் என்றால் பூமிக்கு அடியில்தான் இருக்கும் என்ப‌து போன்ற‌ பிரேமை இந்தியாவிலும் இல‌ங்கையிலும்தான் உள்ள‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, இல‌ங்கையின் ஆதிகால‌ த‌மிழ் ம‌க்க‌ள் த‌ம‌து இந்து ம‌த‌ க‌ட‌வுள்க‌ளுட‌ன் புத்த‌ரையும் வ‌ண‌ங்கி வ‌ந்த‌தை வ‌ர‌லாற்றில் காண்கிறோம். இப்போதும் கூட‌ இந்தியாவின் த‌மிழ் நாட்டில் ப‌ல‌ர் புத்த‌ சிலைக‌ளையும் வைத்துள்ள‌ன‌ர். அந்த‌ வ‌கையில் புத்த‌ர் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு ம‌ட்டும் உரிய‌வ‌ர‌ல்ல‌, அவ‌ர் த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உரிய‌வ‌ர்க‌ள் என்ப‌தால் சில‌ பொருட்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளாலும் பாவிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். அவ‌ற்றை தோண்டி எடுப்ப‌தாக‌ கூறி இன‌ங்க‌ள் ம‌த்தியில் ச‌ந்தேக‌த்தை ஏற்ப‌டுத்துவ‌து த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். இது போன்ற‌ செய‌லைத்தான் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியில் சில‌ ஹாம‌துருமார் கோட்டாப‌ய‌வின் உத‌வியுட‌ன் அர‌ங்கேற்றிய‌தால் நாட்டுக்கு ந‌ல்ல‌து செய்த‌ ம‌ஹிந்த‌வையும் சிறு பான்மை ம‌க்க‌ள் மிக‌க்க‌டுமையாக‌ வெறுக்கும் நிலை ஏற்ப‌ட்ட‌து. ஆக‌வே தொல்பொருள் திணைக்க‌ள‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அதிக‌ம் வாழும் ப‌குதிக‌ளில் ஆய்வு செய்தால் அவ‌ர்க‌ளுக்கு நிறைய‌ தொல்பொருள்க‌ள் கிடைக்கும் என்ப‌தால் அதில் க‌வ‌ன‌மெடுக்கும் வ‌கையில் அர‌சு அறிவிறுத்த‌ல்க‌ள் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கேட்டுக்கொள்கிற‌து.

முஷாரப் முதுநபீன் 15 மில்லியன் ரூபாய் பண மோசடி

பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஷாரப் முதுநபீன் 15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில் (25) அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டார். முஷாரபின் இணைப்பாளராக செயற்பட்ட பொத்துவிலைச் சேர்ந்த நியாஸ் என்பவரிடம் ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று அதற்கான ஒரு காசோலையையும் கையெழுத்திட்டு நியாஸிடம் கொடுத்துவிட்டு பணத்தை இதுவரைக்கும் மீளத் தராமல் ஏமாற்றி வருவதாக SCIB இல் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக முஷாரபை பலமுறை அழைத்தும் சமூகமளிக்காத நிலையில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழக்கொன்றை முஷராப் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இணங்கிக் கொண்டதற்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷாரப் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி மீண்டும் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வருகின்றது. பாதிக்கப்பட்ட நியாஸ் சார்பில் சட்டத்தரணி றாஸி ஜாபீர், பண மோசடியில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்ட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷாரப் முதுநபீன் சார்பில் சட்டத்தரணிகளான சாதீர், உவைஸ், முகைதீன் ஆகியோர் உட்பட பலர் ஆஜராகி இருந்தனர்.

எதிர்க்கட்சிகள் நுகேகொடையில்

எதிர்க்கட்சிகள் நுகேகொடையில் ஏற்பாடு செய்துள்ள "மகா ஜன ஹன்ட" பேரணியின் தற்போதைய சில காட்சிகள் விபரம் 👇

முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு, சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் சம்பளம்

ஒரே வங்கி கணக்கில் இருந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு, சம்பளம் வழங்கப்பட்டு, சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்திலேயே இது வழங்கப்பட்டுள்ளது. சிங்கள அடிப்படைவாதிகளிடம் நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கூச்சலிடுங்கள் என்று இதோ பணம். மறுபக்கம் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் சிங்கள மக்களுக்கு எதிராக கூச்சலிடுங்கள் இதோ பணம். அவர்கள் நிலையாக இருப்பதற்காக இந்த இனவாத்தை பயன்படுத்தினர். எனினும் இனி ஒருபோதும் எமது நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை. எமது அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது இயலாத காரியம் என்றார். கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற JVP யின் கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

குர்ஆன்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்

இறக்குமதி செய்யப்பட்ட புனித குர்ஆன்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் இறக்குமதி செய்யப்பட்ட புனித குர்ஆன்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கான இறுதித் தீர்வை நேக்கிய கலந்துரையாடல், We Are One Organization இன் ஏற்பாட்டில் தெஹிவலை ரோஸ்வூட் சிலோன் ஹோட்டலில் நேற்று (13) இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள், அரச மற்றும் எதிர்கட்சி முஸ்லிம் பராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட பள்ளவாயல் நிர்வாகிகள், முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இறக்குமதி செய்யப்பட்ட புனித குர்ஆனை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கான இறுதித் தீர்வு குறித்து, கலந்து கொண்டிருந்த சகல தரப்பினரும் ஒத்துழைப்புடன் உருவாக்குவதையே நோக்காக கொண்டு கலந்துரையாடப்பட்டிருந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட தடைவிதிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வது, புனித குர்ஆன்கள் தொடர்பில் குழு நியமிக்கப்பட்டமை தேவையற்றது எனவும் ஏனைய மதங்களுக்கு அவ்வாறான குழுக்கள் இல்லாதபோது இதற்கும் அக்குழு தேவையில்லை என நிராகரிப்பது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டுக்கு எதிராக நிசாம் காரியப்பர்

2026 வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களது தின ச‌ம்ப‌ள‌த்தை அதிகரிக்க அரசு முன் வைத்துள்ள யோசனைக்கு எதிராக பா.உ நிஸாம் காரியப்பர் பேசியிருப்பதை ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. தோட்டத் தொழிலாளரது தினக் கூலியிற்கான போராட்டம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல, நாட்டில் கொவிட் 19 ஐத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட முன்னர் சுமார் ஒரு தசாப்த காலம் அவர்களது கோரிக்கை அரசியல் அரங்கில் பேச‌ப்ப‌ட்ட‌து. தற்போதைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி தோட்டக் கம்பனிகள் 200 ரூபாயை அடிப்படை சம்பளத்தில் உயர்த்துவதற்கும் அரசு வருகைக்கான ஊக்குவிப்பாக 200 ரூபாயை தருவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ள‌து. தோட்டத் தொழிலாளர்கள் தனியார்துறை கம்பனிகளுக்கு உழைப்பவர்கள், கம்பனிகளே அவர்களது சம்பளங்களை தீர்மானிக்க வேண்டும், திறைசேரியினால் வரியிருப்பாளர்ளது நிதியில் இருந்து தரப்படக் கூடாது என்ற வாதம் சிறுபிள்ளைத் தனமானது. ஆக‌வே தோட்ட‌த்தொழிலாள‌ர்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை ஓர‌ள‌வாவ‌து தீர்க்க‌ முனையும் அர‌சாங்க‌த்தின் ப‌ட்ஜ‌ட்டை நக்க‌ல‌டிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பா.உ நிஸாம் காரியப்பர் தனது கருத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும், அது கட்சியின் நிலைப்பாடாக இருந்தால் கட்சி முன்வைக்கும் மாற்றீடு யோசனை பற்றி பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும், கட்சியின் நிலைப்பாடு இல்லா விட்டால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை விடுக்கிற‌து. முஸ்ன‌த் முபாற‌க் த‌லைவ‌ர் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கைது செய்யப்படலாம்

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சுக்கான பல மாடி கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்வதில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரிக்கப்பட்டு அல்லது கைது செய்யப்படலாம் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமான இந்த கட்டடம், முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதற்கான மாத வாடகை 21 மில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பள்ளி மாணவியின் அடிப்படை மனித உரிமை மீறல்

தனது கலாச்சார உடையில் பாடசாலைக்கு வந்த முஸ்லிம் பள்ளி மாணவியின் அடிப்படை மனித உரிமைகளை, நாவலையில் உள்ள ஜனாதிபதி பெண்கள் பாடசாலை நிர்வாகம் மீறியதா என்பது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாடசாலையில் படித்த 11 வயது பள்ளி மாணவி பாத்திமா ஹஷானா மற்றும் அவரது தந்தை எஸ்.எச். ஷாகுல் ஹமீத் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1) பிரிவுகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும் நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, வழக்கு தொடர்பாக ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன் ஏதேனும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த மனுவின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி நடத்த உத்தரவிட்டுள்ளது.

சாய்ந்தமருது கரைவாகு வயல் பகுதியில் உள்ள கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம்

சாய்ந்தமருது கரைவாகு வயல் பகுதியில் உள்ள கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைப்பதற்கும் அந்த பிரதேசத்தில் மேலதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் சுமார் 500 மில்லியன் ரூபாய் தேவைப்படும். கல்லோயா அபிவிருத்தி திட்டத்திற்கு 900 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக் கொண்ட எங்களுக்கு 500 மில்லியன் ரூபாய் பெற்றுக் கொள்வது என்பது மிகப் பெரிய விடயமாக இல்லை. இவ்வாறு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தெரிவித்தார். கரைவாகுப்பற்று கிழக்கு கண்டம் மற்றும் தீவு வட்டை மேற்கு கண்டம் என்பவற்றை ஊடறுக்கும் கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைக்கும் முன்னோடி ஆலோசனைக் கூட்டம் அல் அமான் சமூக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வொலிவேரியன் கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் இன்று (05) புதன்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பின் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் இருந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிவிட்டார்கள். மர்ஹும் அஷ்ரஃப் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இன்று பல கட்சிகளாக உருவாகியுள்ளன. இப்படியாக பல கட்சிகள் உருவாக்கப்பட்டவைகள் மக்கள் நலன் கருதி அல்ல. சிலரின் தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்காகவே இக்கட்சிகள் உருவாக்கப்பட்டன. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றப் போவதில்லை. நாங்கள் கடந்த ஒரு வருட காலத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். 900 மில்லியன் ரூபாய் செலவில் கல்லோயா அபிவிருத்தி திட்டத்தை செய்து கொண்டிருக்கிறோம். பல வீதிகளுக்கு காபர்ட் இட்டுள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் பல வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் வெள்ளநீர் வழிந்தோடும் வகையில் வடிகாலமைப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருகின்றது. சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியில் உள்ள பாலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் நிர்மாணம் செய்யப்படும். இது போன்று சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள பாலமும் புதிதாக நிர்மாணம் செய்யப்படும். இப்பிரதேச மக்களாகிய உங்களின் பிரதிநிதியான என்னை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் மதித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக நியமித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களில் ஒருவராக என்னை நியமனம் செய்துள்ளார். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் தலைவர் முபாறக் ஹாஜியார் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, பரீத் ஹாஜியார் உட்பட இன்னும் பலர் உரை நிகழ்த்தினார்கள். சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எஸார் மீராசாஹிப் உட்பட மேலும் பல பிரமுகர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அடுத்ததாக சிக்கப் போகும் பசில்*

05 November 2025 *🛑அரச நிதி மோசடி - அடுத்ததாக சிக்கப் போகும் பசில்* முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பசில் ராஜபக்ஷ, 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கையூட்டல், ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த முறைப்பாடுக்கு அமையவே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விபரங்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2010 ஜூன் முதல் 2014 நவம்பர் மாத காலப்பகுதியில், பசில் உள்நாட்டுப் பயணங்களுக்காக வான்படை வானூர்திகளை பயன்படுத்தியதாகவும், 'மக நெகும' திட்டத்திலிருந்து சுமார் 16 கோடி செலவழித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட மூன்று சொகுசு வாகனங்கள் உட்பட ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் 11 ஏனைய வாகனங்களைப் பயன்படுத்தியதன் மூலம், அரசுக்கு 61 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2010 ஜனவரி 10 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை, 64 கடற்படை வீரர்களும் மற்றும் 84 இராணுவ வீரர்களும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டதாகவும், அவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக 26 கோடிக்கும் அதிக ரூபாய் அரச நிதியிலிருந்து செலவிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar